பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் முறைகேடு என புகார்.!!

கோவை: பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் முறைகேடு என புகார் தெரிவித்தனர்.


கோவை: பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் முறைகேடு என புகார் தெரிவித்தனர்.

தமிழகத்தின் மிகப்பெரிய பாசனத் திட்டங்களில் ஒன்றான பரம்பிக்குளம் ஆழியாறு(PAP)பாசனத் திட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் பல்வேறு முரண்பாடுகள் ஏற்படுவதால், விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஏராளமான விவசாயிகள் இன்று உடுமலை பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காந்தி மற்றும் காமராஜர் புகைப்படங்களை வைத்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். பாசன கால்வாயின் கரையோரங்களில் செயல்பட்டுவரும் மட்டை மில்கள் மற்றும், கோழிப் பண்ணைகளின் தேவைக்காக ஏராளமான தண்ணீர் திருடப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.



ஆனால் இதுகுறித்து எந்த ஒரு புகார் தெரிவித்தாலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர் மேலாண்மையில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி வருவதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்.

இவைகளின் விளைவாக விவசாயிகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவர்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து விவசாயிகளுக்கு நன்மை செய்யவேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தண்ணீர் திருடப்பட்டால் விவசாயிகள் களத்தில் இறங்கி நடவடிக்கை மேற்கொள்வோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...