பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 3-வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்ததால், கோவை மாவட்ட எஸ்.பி. பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள தம்பதி கல்லாங்குத்து மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, மணிகண்டன்(22), அவரது மனைவி சரோஜினி(20) ஆகியோரின் 3-வயது பெண் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி, தாய் சரோஜினி மற்றும் அருகில் வசிப்போரும் சேர்ந்து, வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனை செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்த நிலையில், குழந்தையின் உயிரிழப்பு குறித்து சந்தேகம் எழுந்ததால், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆனைமலை காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில், காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்றனர். சம்பவ இடத்தில் குழந்தையின் தாய் சரோஜினி மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்து வந்த நிலையில், குழந்தையின் இறப்பு குறித்து சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தையின் தந்தை மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.