கோவை: கோவை காரமடை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாயின.

கோவை காரமடையை அடுத்துள்ள சாந்திமேடு எனும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், இங்கு வந்து பஞ்சுகளை வாங்கி நூல் நூற்று வருகின்றனர். இதனால் சுமார் 700க்கும் மேற்பட்ட மூட்டை பஞ்சுகளை குடோனில் அடுக்கி வைத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று பஞ்சு மூட்டைகளில் தீப்பற்றியுள்ளது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென்று பற்றியுள்ளது. இதனால் குடோனில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து நாசமாயின.
இது குறித்து தகவலறிந்து மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் நிலைய அலுவலர்கள் பாலசுந்தரம், ரகுநாதன், தனசேகரன் தலைமையில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயிணை அணைத்தனர்.
இதில், அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புமில்லை. இருப்பினும், பஞ்சு மூட்டைகளில் பற்றிய தீ அணைக்கப்பட்டதால் அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.
இந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானதால் பல லட்ச ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.