கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே 4 வயது மகனுடன் மனைவி மாயமானதாக காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள 10 நெம்பர் முத்தூர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரவிக்குமார் (39) என்பவர் மனைவி சந்திரகலா (35) மகன் பிரவீன்குமார் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி மதியம் ரவிக்குமாரின் மனைவி சந்திரகலா தனது நான்கு வயது மகளுடன் கடைக்குச் சென்று வருவதாக கூறி சென்றுள்ளனர். ஆனால், வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் கணவன் ரவிக்குமார் உறவினர் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும், இருவரையும் தேடி வந்தனர்.
ஆனால், மனைவி மற்றும் மகளை கண்டுபிடிக்க முடியாததால் நேற்று மாலை மாயமான சந்திரிக்கலாவின் கணவர் ரவிக்குமார், கிணத்துக்கடவு காவல் நிலையத்தில், மனைவி மற்றும் 4 வயது மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்திரகலா மற்றும் நான்கு வயது சிறுவனை தேடி வருகின்றனர்.