கலைஞர் கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு நாள்: கோவை குறிச்சியில் திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை!

கோவை: கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குறிச்சி பகுதியில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



கோவை: கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குறிச்சி பகுதியில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் அனுசரித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி திமுகவினர் மரியாதை செய்தனர்.



இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.



மேலும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.



இதேபோல், கணேசபுரம் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் குறிச்சி தெற்குப்பகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், ஈச்சனாரி மகாலிங்கம், கணேசபுரம் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...