தமிழக வணிகவரித்துறை மற்றும் நிதி அமைச்சகம் பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டத்தில் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில் அதன் தலைவர் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்..!

கோவை: தமிழக வணிகவரித்துறை மற்றும் நிதி அமைச்சகம் ஏற்பாட்டில் இன்று(7.8.21) சென்னையில் நடந்த தமிழக பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டத்தில் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில், அதன் தலைவர் C.பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு ஜிஎஸ்டி(GST) பத்திரப்பதிவு, போக்குவரத்து மற்றும் விவசாயம் சம்பந்தமான ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.


கோவை: தமிழக வணிகவரித்துறை மற்றும் நிதி அமைச்சகம் ஏற்பாட்டில் இன்று(7.8.21) சென்னையில் நடந்த தமிழக பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டத்தில் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில், அதன் தலைவர் C.பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு ஜிஎஸ்டி(GST) பத்திரப்பதிவு, போக்குவரத்து மற்றும் விவசாயம் சம்பந்தமான ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

தமிழக வணிகவரித்துறை மற்றும் நிதி அமைச்சகம் ஏற்பாட்டில் இன்று(7.8.21) சென்னையில் நடந்த தமிழக பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டத்தில்...

வணிக வரித்துறையில் C form பற்றி நெடுநாளாக நிலுவையில் இருக்கும் நோட்டீஸ்களை வாபஸ் பெற வேண்டும்.

நுழைவு வரி, CST மற்றும் வாட் வரி விதிப்பில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வாக சமாதான திட்டம் ஒன்றை (one time settlement scheme) அறிவிக்க வேண்டும்.

மாவட்ட மற்றும் மாநில அளவில் வரிவிதிப்பு குறைதீர்ப்பு கூட்டங்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும். மாவட்ட அளவில் வியாபார நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்.

கட்டுமானத்துறையில் வரி விதிப்பில் ITC credit எடுக்க வகை செய்ய வேண்டும்.

பத்திரப்பதிவு துறையில் பெண்களுக்கு வரிவிதிப்பில் சலுகை அளிக்க வேண்டும்.

சொத்துகள் வாங்கி ஐந்து வருடத்துக்குள் விற்கும்போது, set off in stamp duty அளிக்க வேண்டும்.

கோவிட் காலத்தில் மகாராஷ்டிரா கேரளா உள்ளிட்ட இந்த மாநிலங்களில் பத்திரப்பதிவு சில சதவிகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதை தமிழ்நாட்டில் செய்தால் மக்களுக்கு ஏதுவாக இருக்கும்.

விவசாயத்துறையில் நெல் கொள்முதல் மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.

இது தவிர ஜிஎஸ்டி, விவசாயம், பத்திரப்பதிவு, போக்குவரத்து சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிதி அமைச்சரிடம் இந்திய தொழில் வர்த்தக சபையின் சார்பில் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...