கோவை: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் நீக்கம் அவசியமற்றது என்று மத்திய அரசுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் 1991-92 முதல் இன்று வரையிலும் மத்திய அரசால் ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது’ வழங்கப்பட்டு வருகிறது. ’கேல் ரத்னா’ என்றால் ’Sports Gem -விளையாட்டில் மாணிக்கம்' என்று பொருள்படும்.
சர்வதேச சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ், கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இனிமேல் இந்த விருதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பெயர் நீக்கப்பட்டு, முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் தயான் சந்த் அவர்களின் பெயரில் மட்டுமே வழங்கப்படுமென பாரதப் பிரதமர் மோடி அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
41 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய ஹாக்கி ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றதுள்ளது, அது இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதும், பெருமை சேர்க்கக்கூடியதுமே. அதேபோல, மகளிர் அணியும் பதக்கங்கள் எதுவும் பெறவில்லை என்றாலும் கடைசி வரை போராடி தங்களுடைய அபரிமிதமான திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்கள். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஆடவர் அணி மற்றும் மகளிரணி வீரர்களைக் கௌரவப்படுத்த பாரதப் பிரதமர் மோடி அவர்கள் எண்ணுவதில் எவ்வித தவறும் இல்லை; அவருடைய முயற்சி பாராட்டத் தகுந்ததே.
எனினும், இளம் வயதில் இந்த நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணம் செய்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பெயரை நீக்கி தான், அவ்வுயரிய விருதுக்கு தயான் சந்த் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற அவசியமில்லை.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே, 1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கங்களைப் பெற முக்கியக் காரணமாக இருந்தவர் தயான் சந்த்.
அது மட்டுமின்றி தயான் சந்த் அவர்களின் பெயரிலேயே இந்தியாவெங்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இளைஞர்களை தயார்ப்படுத்தும் வகையில் குறைந்தது 5-10 ஆண்டுகளுக்கு உண்டு, உறைவிட விளையாட்டு பள்ளிகளை மாவட்டந்தோறும் துவங்கும் புதிய முயற்சியிலும் ஈடுபடலாம்.
எனவே, சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் தேசத்தை அடையாளப்படுத்தக் கூடியவர்களுக்கு ஏற்கனவே உள்ளபடி ’ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ என்றே தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும், ஒலிம்பிக் போட்டிக்கென்றே அகில இந்திய அளவில் தயான் சந்த் ’ஒலிம்பிக் அகாடமியை உருவாக்கி, அதை இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்வதுமே சரியானதாக இருக்க முடியும் என தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே, முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பெயரிலேயே ’ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது’ தொடரட்டும், தயான்சந்த் அவர்களின் பெயரில் ’ஒலிம்பிக் அகாடமி’ ஒன்று இந்தியாவில் புதிதாக உருவாகட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.