கொரோனா மூன்றாவது அலை.. கோவை தி யுனைடெட் அறக்கட்டளை சார்பாக கொரோனா பேருந்து விழிப்புணர்வு பிரச்சாரம்.!!

கோவை: கோவை தி யுனைடெட் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற கொரோனா பேருந்து பிரச்சாரத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்றார்.


கோவை: கோவை தி யுனைடெட் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற கொரோனா பேருந்து பிரச்சாரத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்றார்.

கோவையில் தனியார் அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் சரவணம்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

2 -வது அலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா மூன்றாவது அலை பரவலைப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை சரவணம்பட்டி அடுத்த குரும்பம் பாளையத்தில் உள்ள தி யுனைடெட் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த அறக்கட்டளை நிறுவனர் ராதாகிருஷ்ணன் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியரின் முன்னிலை வகித்தார். இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

இதையடுத்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பிரச்சார பேருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி கோவை அரசு மருத்துவமனை, காந்திபுரம் பேருந்து நிலையம், கணபதி பேருந்து நிலையம், வழியாக சரவணம்பட்டி சோதனைச் சாவடியில் நிறைவு செய்யப்பட்டது.

சரவணம்பட்டி பகுதிக்கு வந்த பிரச்சார பேருந்தை சரவணம்பட்டி ஆய்வாளர் கந்தசாமி வரவேற்று நிறைவு செய்தார். அவர் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தைச் சிறப்பாக நடத்திய அறக்கட்டளைக்குப் பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சரவணம்பட்டி அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோபாலகிருஷணன் உட்படப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...