கோவை: இந்த ஆண்டு கல்லூரியில் சேரக்கூடிய மாணவர்களுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.சி மாணவர்களுடைய மதிப்பெண் பட்டியல் குறித்த புகார் எதிரொலியாக உடனடியாக மாணவர்களுக்குப் பயன் விளைவிக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.

ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த சிபிஎஸ்சி 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவரும் பாஸ் என்ற திட்டத்தின் கீழ் அந்த மாணவர்களுடைய காலாண்டு, அரையாண்டு ரிவிஷன் டெஸ்ட் உட்பட அவர்களுடைய நன்னடத்தை அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டது.
அதில் கோவையில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி, கதிர் வித்யா மந்திர் ஆகிய பள்ளி மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுப் பார்த்தபோது, கட்டாப் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருந்தது.
அவர்கள் பள்ளியில் நன்கு படிக்கக்கூடிய மாணவர்களாக இருந்தனர். தொடர்ந்து பெற்றோர்கள் மாணவர்கள் பள்ளியில் கோரிக்கை வைத்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைக் கருத்தில் கொண்டு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரதாபனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கோவையில் இரண்டு பள்ளிகளில் மதிப்பெண்களில் பட்டியலில் மதிப்பெண்கள் மிகவும் குறைந்துள்ளதாகப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை அளித்துள்ளன.
அதனால் நடப்பாண்டிலேயே மாணவர்களுடைய எதிர்காலம் கருதி இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
அதனால் தாங்கள் உடனடியாக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.