பொள்ளாச்சியில் 14-வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது!

கோவை: பொள்ளாச்சியில் 14 வயது சிறுமியைத் திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் 14 வயது சிறுமியைத் திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி பகுதியில் 14 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கோவை குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 14 வயது சிறுமியை இளைஞர் திருமணம் செய்து இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறை, இளைஞர் மீது போக்சா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து இன்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...