கோவை: கால்நடைகளுக்குக் கோமாரி நோய்த் தடுப்பு ஊசியை உடனடியாக செலுத்தக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் பெருமளவில் கால்நடைகளை வைத்து ஜீவனம் செய்து வருகிறார்கள்.
கால் நடைகளுக்கு அம்மை, காரணமாகக் கோமாரி நோய் தாக்கி வருகிறது. கிராமங்களில் கால்நடைகளுக்குக் கோமாரி நோய் வராமல் தடுப்பதற்காகத் தடுப்பு ஊசி செலுத்த வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கோமாரி நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோயைக் கட்டுப்படுத்த அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி தடுப்பு ஊசி செலுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியுள்ளார்.