கோவை: காந்திபுரம் டவுன் பேருந்து நிலைய வாசலில் தெருவிளக்கு அமைக்க வேண்டி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் முக்கிய பேருந்து நிலையங்கள் 3 உள்ளது. அதில் குறிப்பிடத் தகுந்தவை கோவை டவுன் பேருந்து நிலையம், சென்ட்ரல், திருவள்ளுவர் பேருந்து நிலையம்.
இதில் டவுன் பேருந்து நிலையத்தைத் தவிர மற்ற இரண்டு பேருந்து நிலையங்களும் வெளி ஊர்களுக்குச் செல்லக்கூடிய பயணிகள் செல்வர். டவுன் பேருந்து நிலையத்தில் வெளி ஊரிலிருந்து கோவை வரக்கூடியவர்கள் கோவையின் பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்காக வருவார்கள்.
ஆதலால் டவுன் பேருந்து நிலையம் எப்பொழுதும் கூட்டமாகக் காணப்படும். கடந்த வாரம் கொரோனா காரணமாகக் கடைகள் 5 மணி வரை மட்டுமே செயல்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து 5 மணி ஆனவுடன் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் சுற்றியுள்ள அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. இந்த நிலையில் டவுன் பேருந்து நிலையத்திற்கு வந்து கோயம்புத்தூரில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் செல்ல வரக்கூடிய பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

காரணம் டவுன் பேருந்து நிலைய வாசலில் லைட்டுகள் எதுவுமே கிடையாது. இவ்வளவு நாள் வரை பேருந்து நிலைய வாசலில் உள்ள கடைகளின் லைட் மட்டுமே பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக வேகமாக வந்து டவுன் பஸ்களில் ஏற வரக்கூடிய முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அரசு ஊழியர்கள், பஸ்டாண்டு வாசலில் எந்தவிதமான லைட்டுகள் இல்லாததால் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.

அதனால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு டவுன் பேருந்து நிலைய வாசலில் மேற்கூரை லைட்டுகளை அமைத்து பொது மக்களுக்கு உதவ வேண்டும் என சீனியர் சிட்டிசன்கள், வயது முதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.