கோவை: சென்னையில் உள்ள சத்தியம் தொலைக்காட்சி தலைமை அலுவலக வளாகத்தில் கத்தி, கேடயத்துடன் புகுந்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்குக் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் உள்ள சத்தியம் தொலைக்காட்சி தலைமை அலுவலகத்துக்குள் செவ்வாய்க்கிழமை மாலை கத்தி மற்றும் கேடயத்துடன் நுழைந்த நபர், அங்கிருந்த ஊழியர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் அலுவலக வரவேற்பறையிலிருந்த கண்ணாடி மேசை, தொலைக்காட்சி மற்றும் இதர பொருட்களைக் கத்தியால் அடித்து உடைத்துச் சேதப்படுத்தியுள்ளார். இதில் சில ஊழியர்களும் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பொதுவான பல பிரச்சினைகளைக் கூறி தகாத வார்த்தைகளால் அந்த நபர் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தக்க சமயத்தில் காவல்துறை வந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்கப்பட்டது.
விசாரணையில் அவர் கோவை உப்பிலி பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பதும், ராயபுரம் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பதும் தெரியவருகிறது.
செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய நபர் யார்? அவரது பின்னணி என்ன? என்பதை காவல்துறை விசாரணை நடத்தி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்க வாய்ப்புள்ளது எனக்கூறி சம்பவத்தை நீர்த்துப் போகச் செய்துவிடக்கூடாது. மாறாக அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க வேண்டும் எனக் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
ஏனென்றால், ஒரு செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தைக் கண்டறிந்து, பல்வேறு விசயங்களைக் குறிப்பிட்டு, ஊழியர்களை மிரட்டி, அந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளார் என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
இதனை ஒரு செய்தி நிறுவனத்தின் மீதான தாக்குதலாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த ஊடக நிறுவனங்கள், ஊடக ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்க முடியும். எனவே இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணையையும், பாரபட்சமற்ற நடவடிக்கையையும் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் எதிர்பார்க்கிறது.
மேலும், நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தைத் தமிழக அரசு தாமதப்படுத்தாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதையும் மன்றம் வலியுறுத்துகிறது.
சட்ட ரீதியான பாதுகாப்பு மட்டுமே வரும் காலத்தில் ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் பாதுகாக்கும் என்பதைத் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.