பொதுமக்களிடம் 82 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கோவை நிதி நிறுவன அதிபர்கள் 3 பேர் தேடப்படும் குற்றவாளியாக டான் பிட் ஹைகோர்ட் அறிவிப்பு..!

கோவை: கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் 82 இலட்சத்து 85,000 மோசடி செய்த கிரீன் லைப் நிதி நிறுவன அதிபர்கள் மூன்று பேரை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.


கோவை: கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் 82 இலட்சத்து 85,000 மோசடி செய்த கிரீன் லைப் நிதி நிறுவன அதிபர்கள் மூன்று பேரை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

கோவையில் இயங்கி வந்த கிரீன் லைஃப் என்ற நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான கோவை புதூரைச் சேர்ந்த அஸ்மத்கான் கோரி 35, திருநகர். மேற்கு நத்த மாடிப்பட்டி, மெயின் ரோடு, கோல்டன் ராக், திருச்சியைச் சேர்ந்த அம்ஜத்கான் கோரி 36, உறையூர் சாலை ரோடு திருச்சி சையது முகமது ரபி 35, என்பவர்கள் பொதுமக்களை ஏமாற்றி 44 பேரிடம் முதலீட்டு தொகையைப் பெற்று முதலீட்டு பணத்திற்கு ஒவ்வொரு மாதமும் இரட்டிப்பு பணமாகத் தருவதாக ஆசை வார்த்தை கூறி 82 இலட்சத்து 85,000 டெபாசிட்டாக பெற்றுக் கொண்டும் பின்னர் பணத்தைத் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டனர்.

இது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண் 35/2010 சாபி 120 B,406, 420, இ.த.ச மற்றும் 5 of TAPID act வழக்குப்பதிவு செய்து மேற்படி வழக்கானது கோவை டான் பிட் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றவாளிகள் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.



இதைதொடர்ந்து அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதற்குப் பிறகும் தொடர்ந்து அவர்கள் தலைமறைவாகி உள்ளதால் சட்டப்பிரிவு 82 கு.வி.மு.ச படி அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக கோவை டான் பிட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்களால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...