ஈரோடு ஈமு கோழி மோசடியில் யுவராஜ் உட்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை... கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு..!

கோவை: கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் உட்பட 2 பேர் ஈமு கோழி நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் உட்பட 2 பேர் ஈமு கோழி நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு சுதி ஈமு பார்ம்ஸ், சுதி ஈமு பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், சுதி ஈமு பார்ம்ஸ் அண்ட் ஹேச்சரிஸ் என்ற பெயர்களில் ஈமு கோழி பண்ணை நிறுவனத்தை நடத்திய பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மகன் சு.தமிழ்நேசன், சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்காவைச் சேர்ந்த கொங்கு பேரவை அமைப்பின் தலைவர் சு.யுவராஜ் மற்றும் ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவரின் சி.வாசு, ஆகியோர்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு விளம்பரம் செய்தனர்.

முதலீட்டாளர்களிடம் ஆசைவார்த்தைக்கூறியும், அவ்வாறு திட்டம்-1 பண்ணைத் திட்டத்தில் ரூ.1லட்சத்து 50ஆயிரம் முதலீடு செய்தால் அதற்கு ஒரு செட் அமைத்துக் கொடுத்தும் முதலீட்டாளர்களுக்கு 6 ஈமுக்கோழிகள் கொடுத்தும், அதற்கு தேவையான தீவனங்கள் மற்றும் மருந்துகள் கொடுப்பதாகவும் விளம்பரப்படுத்தினர். மேலும், மாதாமாதம் பராமரிப்புத் தொகையாக முதலீட்டாளர்களுக்கு ரூ.7,000/-ம் கொடுப்பதாகவும், வருடமுடிவில் ஊக்கத்தொகையாக முதலீட்டாளர்களுக்கு ரூ.20,000/-ம் தருவதாகவும் கூறினர்.

மேலும், திட்டம்-2 பண்ணைத் திட்டத்தில் ரூ.1லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தால் நிறுவனமே 6 ஈமு கோழிகளை பராமரித்தும், முதலீட்டாளர்களுக்கு மாதாமாதம் 8ஆயிரம் கொடுப்பதாகவும், வருடமுடிவில் ஊக்கத்தொகையாக முதலீட்டாளர்களுக்கு 20 ஆயிரம் தருவதாகவும் கூறி, முதலீட்டாளர்களிடம் 2 வருடகாலம் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.



ஆனால், ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே பணத்தை திருப்பித்தராமலும், 121 முதலீட்டாளர்களிடம் 2 கோடியே 70 லட்சத்து 15ஆயிரத்து 550 ரூபாயை ஏமாற்றி தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து, நிறுவனத்தில் இரண்டு விதமான திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளரான நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், தோக்கவாடியைச் சேர்ந்த பொங்கைய கவுண்டர் மகன் பழனிசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சௌந்தரராஜன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மற்ற குற்றவாளிகள் கைதான நிலையில், இந்த வழக்கில் கொங்கு பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.



இந்தநிலையில், கோகுல் ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கோவை டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் மொத்தம் 139 சாட்சிகளை விசாரித்து முடித்து இன்று நீதிமன்றத்தில் மூன்று குற்றவாளிகள் ஆஜரானார்கள். தொடர்ந்து கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி எதிரிகள் மூவருக்கும் தல 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மூவருக்கும் சேர்த்து, 2 கோடியே 47 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்புக் கூறினார். முன்னதாக கொங்கு யுவராஜின் ஆதரவாளர்கள் மற்றும் ஈமு கோழி முதலீட்டாளர்கள் ஏராளமானோர் கோர்ட் வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...