கோவை: கோவை மாவட்ட 3-காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் 3051 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு 394 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்ட 3-காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் 3051 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு 394 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பொறுப்பேற்றதிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதைப்பொருள் சம்பந்தமாகத் தீவிர சோதனை நடத்தும் படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கோவை மாவட்ட 3 காவல் நிலையத்துக்குள் கடந்த 2 மாதத்தில் 3051 கிலோ புகையிலை பொருட்களை 394 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கடந்த 2 மாதங்களில் கோவை மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் கருமத்தம் பட்டி, சூலூர், மற்றும் கோவில்பாளையம், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து 3051 கிலோ கிராம், புகையிலை பொருட்களை, பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கோவை மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு விரோதமாகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக '394' வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்ற சட்டத்திற்கு விரோதமாகப் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து ரகசியத் தகவல் தெரிவிப்பவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் எனக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப., பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.