கோவை: கேரளாவில் இருந்து முறையான சான்றிதழ்கள் இல்லாமல் கோவைக்கு வரும் வாகனங்களை கேரளாவிற்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர், கோவை ரயில் நிலையத்தில் நடைபெறும் கொரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரனுடன் அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், தமிழக-கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடிக்கு வந்த அமைச்சர் ராமச்சந்திரன், அங்கு மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராமச்சந்திரன், கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாகவும், கோவையில் 230 பேர் அளவிற்கு பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்ததாலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். கொரோனா நெகட்டிவ் சர்டிஃபிகேட், இரு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.
மேலும், இரு மாநில அரசுகளுக்கும் சேர்த்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும், முறையான சான்றிதழ் இல்லாமல் வரும் வாகனங்களை கேரளாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
முறையான சான்றிதழ் இல்லாமல் வரும் வாகனங்களை கேரளாவிற்கு அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். கேரளாவில் இருந்து நடந்து வருபவர்கள், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்கள் என அனைத்து நபர்களையும் நிறுத்தி சோதனை செய்கின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பபடுகின்றனர். வாளையாறு சோதனைச் சாவடியில் கடந்த 2ஆம் தேதி முதல் சோதனை நடைபெற்று வந்தாலும் இன்று முதல் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.