வால்பாறை பகுதியில் கட்டு விரியன் பாம்பை லாகவமாக பிடித்த தீயணைப்பு துறையினர்..!

கோவை: வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் கட்டடத் தொழிலாளர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, அங்கிருந்த கட்டு விரியன் பாம்பை தீயணைப்புத் துறையினர் லாகவமாகப் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.


கோவை: வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் கட்டடத் தொழிலாளர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, அங்கிருந்த கட்டு விரியன் பாம்பை தீயணைப்புத் துறையினர் லாகவமாகப் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் கட்டடப் பணியின் போது உலா வந்த கட்டு விரியன் பாம்பை கட்டடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கண்டு, உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



தகவலறிந்து அங்கு வந்த நாகராஜன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் மணல் மூட்டை இடிபாடுகள் இடையே ஒளிந்திருந்த நான்கரை அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை லாகவமாகப் பிடித்தனர். இது விஷத்தன்மை உள்ள பாம்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மழைக்காலம் என்பதால், குளிர் அதிகமாக உள்ளதால் சூடாக இருக்கும் இடத்தை நோக்கி பாம்புகள் பயணிக்கிறது. தற்போது வீடுகளில் உள்ள அடுப்பங்கரை பகுதியிலும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று தீயணைப்புத் துறையினர் அறிவுரை வழங்கினர்.



இந்தப் பாம்பை பிடித்து சாக்குப்பையில் போட்டு அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விடுவதற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...