பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை 110 அடியை எட்டியது - கரையோர கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள எச்சரிக்கை..!

கோவை: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாகப் பெய்து வருவதைத் தொடர்ந்து, பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியது. இதனால், கரையோர கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாகப் பெய்து வருவதைத் தொடர்ந்து, பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியது. இதனால், கரையோர கிராமங்களுக்கு முதல் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய அணியாக விளங்குகின்ற 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தற்போது பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டு தினங்களாக ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு முதல்முறையாக 110 அடியை எட்டியுள்ளது.

அணைக்கு வினாடிக்கு 859 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்னும் சில தினங்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், ஆற்றங்கரையோரம் உள்ள அம்பராம்பாளையம் ஆனைமலை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு பொதுப்பணி துறை சார்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அம்பராம்பாளையம் குறிச்சி, குனியமுத்தூர், கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கோவை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், அதே பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆதாரமாக விளங்கும் ஆழியாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் இந்தாண்டு பாசனத்திற்கும் குடிநீருக்கும் பிரச்சனை இருக்காது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...