கோவை: கோவையில் காதி கிராப்ட் கடை கதவை உடைத்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான பட்டுச் சேலைகளை திருடி, 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த திருடனை போலீசார் கைது செய்தனர்.

கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் அருகில் தமிழ்நாடு கைத்தறித் துறைக்கு சொந்தமான காதி கிராப்ட் விற்பனையகம் உள்ளது. இங்கு கடந்த 30ம் தேதி இரவு பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள 60 பட்டுப் புடவைகளை திருடிச் சென்றார்.
இந்த விற்பனையகத்தில் கதர் துணிகள், வாசனை திரவியங்கள், சந்தன மாலைகள் என ஏராளமான பொருட்கள் இருந்தும் பட்டுப்புடவைகள் மட்டும் திருடு போனது. அதேபோல, கடையின் விற்பனைத் தொகை 55 ஆயிரம் ரூபாய் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அதுவும் திருடு போகாமல் இருந்தது.
அதே சமயத்தில் கடை அருகே உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் சுவர் ஏறி குதித்த நபர் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவமும் நடைபெற்றது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுகுமாரன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், கோவில் வளாகம் மற்றும் காதிகிராப்ட் கடை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் பூட்டை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில், சேலைகளை காதி கிராப்ட் விற்பனையகத்தில் இருந்து திருடிச் சென்ற நபர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் விற்பனை செய்துள்ளார். அதற்காக 6,000 ரூபாய் பணத்தை மட்டும் திருடன் வாங்கியுள்ளார். 60 பட்டுப் புடவைகள் மதிப்பு 6 லட்சம் ரூபாய் என செய்திகளில் வெளிவந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருடன் தனது மனைவியிடம் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை 6,000 ரூபாய்க்கு விற்று ஏமாந்து விட்டேன் என்று புலம்பியுள்ளார்.
மேலும், இதுகுறித்து சேலைகளை 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய நபரிடம் திருடன் சண்டை போட்டுள்ளார். இந்த தகவலை சேலைகளை திருடி சென்ற நபரின் மனைவி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ராமநாதபுரம் அம்மன் குளம் ஏரி மேடு பகுதியைச் சேர்ந்த முருகன் (31) என்ற நபரை பிடித்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் 60 பட்டுப்புடவைகளை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஜலீல்(52) என்ற பழைய புடவைகள் விற்கும் வியாபாரியிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் பழைய சேலை வியாபாரி ஜலீலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், விற்றது போக 25 பட்டுப்புடவைகள் மட்டும் தன்னிடம் இருப்பதாக கூறியிருக்கிறார். அந்த 25 பட்டுப்படவைகளை மீட்ட போலீஸார் சேலைகளை திருடிய முருகன் மற்றும் வாங்கி விற்ற ஜலில் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விற்பனை செய்யப்பட்ட புடவைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.