வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் சிங்கவால் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் சிங்கவால் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகரை ஒட்டியுள்ள புது தோட்டம் தேயிலை தோட்டத்தில் அரியவகை இனமான சிங்கவால் குரங்குகள் ஏராளமாக உள்ளன. இந்தக் குரங்குகள் புது தோட்டம் தேயிலைத் தோட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறி நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் வால்பாறை நகரில் சுற்றி வருகின்றன.
இந்நிலையில், இந்த குரங்குகள் காமராஜ் நகர், கக்கன் காலனி, கோஆபரேடிவ் காலனி மற்றும் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து சமையலறையில் உள்ள உணவு பண்டங்களை சாப்பிடும் வகையில் கிடைத்த பொருட்களை எடுத்து உடைத்தும் நாசப்படுத்தி வருகின்றன.

மேலும், கையில் கிடைத்த பொருட்களை தூக்கிச் சென்று விடுகின்றன. மேலும் வால்பாறை நகரின் பிரதான சாலையில் உள்ள பேக்கரிகள், டீக்கடைகள் பழக்கடையில் புகுந்து பழங்கள் பொருட்களை எடுத்துச் செல்கின்றன. விரட்டினாலும் கடிக்க வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்திலும் நிம்மதி இழந்தும் உள்ளனர்.
இந்த நிலையில், வால்பாறை நகரில் புகுந்து அட்டகாசம் செய்யும் சிங்கவால் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.