கோவை: கோவை மாவட்டம் சூலூர் தாலுகா பகுதியில் விவசாய தொழில் செய்து வரக்கூடிய ஒருவர்.

தன்னுடைய விவசாய நிலத்தில் தொடர்ந்து பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் என்ன செய்வது என தெரியாமல் அடிக்கடி பாம்பு பிடிப்பவர்களுக்கு போன் செய்து அதைப் பிடித்து உயிரியல் பூங்காவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். பிறகு இவரே யூ டியூப் மூலமாக டிஸ்கவரி சேனலில் பாம்பு பிடிப்பதைப் பார்த்து ஆர்வம் கொண்டு பாம்புகளைப் பிடித்து அவரே வனத்தில் விட்டு வருகிறார்.
கோவை மாவட்டம் சூலூர் கிட்டம்பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன் விவசாயம் செய்து வரும் இவர் தனது தோட்டத்தில் தினந்தோறும் பாம்புகள் வருவது தொடர்கதையாக இருந்துள்ளது. இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது டிஸ்கவரி சேனலில் பாம்பு பிடிப்பது குறித்த காணொளி வந்துள்ளது. அதனைப் பார்த்த மனோகரன் பாம்பை கொல்லாமல் பாம்பைப் பிடித்து காட்டில் விடுவது எப்படி என்று அந்த காணொளியில் பார்த்துள்ளார். ஐந்தடி நீளமான பைபிள் கயிறை உள்ளே விட்டு பாம்பை லாகவமாக சுருக்கிட்டு பிடிக்கும் உபகரணத்தை தயார் செய்துள்ளார். அதன்பின் தோட்டத்திற்கு வரும் பாம்புகளை லாகவமாகப் பிடித்து அதனைக் கொல்லாமல் அருகிலுள்ள ஆற்றுப்பகுதியில் அல்லது காட்டுப் பகுதிகளில் விட்டு வருகிறார்.
இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள். கடந்த நான்கு வருடமாகப் பாம்பு பிடிப்பதற்கான ஆர்வம் வந்தது அப்போதெல்லாம் பாம்பை அடிக்காமல் துரத்தி விட்டு வந்தோம். ஆனால், பாம்புகள் வருவது குறையவில்லை. இதனையடுத்து, டிஸ்கவரி சேனலில் பாம்பு பிடிப்பது குறித்த காணொளியைப் பார்த்தேன்.
அதில் உபயோகிக்கப்பட்ட உபகரணத்தில் பாம்பு எளிதில் மாட்டி கொண்டது. அதுபோன்று தயாரித்து பாம்புகளைப் பிடித்து வருகிறோம். பாம்புகளைப் பிடிக்கும்போது 4 அல்லது 5 அடி தூரத்தில் நின்று கொண்டு இந்த பைப் குச்சியை பயன்படுத்தி பாம்பை உயிருடன் பிடித்து சாக்கில் போட்டு தூரத்தில் உள்ள காடுகளில் விட்டுவிடுவதாகத் தெரிவித்தார்.
இதுபோன்ற உபகரணங்களில் பிடிப்பதால் பார்வையைத் திருப்பித் தாக்குதல் செய்ய வருவதில்லை, இதனால் எந்த அச்சமும் இன்றி பாம்பைப் பிடிக்க முடிகிறது. இந்த உபகரணத்தைப் பயன்படுத்தி நாகப்பாம்புகள், சாரைப்பாம்பு, பச்சை பாம்பு உள்ளிட்டவற்றை பிடித்து உள்ளதாகத் தெரிவித்தார்.