பல்லடம் அருகே கட்டட வேலை செய்து கொண்டிருந்த வடமாநில வாலிபர்களைத் தாக்கி செல்போன்... பணம் பறிப்பு..!

திருப்பூர்: பல்லடம் அருகே கட்டட வேலை செய்து கொண்டிருந்த வடமாநில வாலிபர்களை மர்ம நபர் ஒருவரும் அவருடன் மேலும் சிலரும் சரமாரியாகத் தாக்கி அவர்களிடம் இருந்து செல்போனைப் பறித்துக் கொண்டதோடு, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே கட்டட வேலை செய்து கொண்டிருந்த வடமாநில வாலிபர்களை மர்ம நபர் ஒருவரும் அவருடன் மேலும் சிலரும் சரமாரியாகத் தாக்கி அவர்களிடம் இருந்து செல்போனைப் பறித்துக் கொண்டதோடு, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் சேடபாளையம் சாலை சேகாம்பாளையம் என்ற இடத்தில் பீகாரைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி கட்டட கூலி வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில், இன்று மாலை அங்கு வட மாநில தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த தொழிலாளர்களை மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தொழிலாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பணத்தையும் செல்போனையும் பறித்துக் கொண்ட வாலிபர் தனது செல்போனில் யாருக்கோ தகவல் கொடுக்க அங்கு மேலும் வந்த ஐந்து நபர்களுடன் இந்த வாலிபரும் சேர்ந்து கொண்டு வடமாநில தொழிலாளர்களை சரமாரியாகத் தாக்கி அங்கு கட்டட வேலைக்கு வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளைப் பிடிங்கி வீதியில் வீசியும் அவர்கள் தங்கி வேலை செய்துவந்த ஓலையைப் பிடுங்கி சாலையில் வீசியும் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் வட மாநில தொழிலாளர்கள் கூச்சலிட அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து தாக்குதல் நடத்திய ஆறு வாலிபர்களையும் பிடிக்க முயற்சித்துள்ளனர். அதில் ஒருவன் பிடிபட்டுக் கொண்டதாகவும் மற்ற ஐந்து நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பல்லடம் போலீஸார் தாக்குதலில் காயமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கட்டடக் கூலித் தொழிலாளர்கள் நிஷாத், ஜோதி, சுதான் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களைப் பல்லடம் போலீஸார் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

மேலும், தாக்குதல் நடத்திய ஆறு பேரில் பல்லடம் கல்லம்பாளையத்தைச் சேர்ந்த ஒரு நபரை பிடித்து போலீஸாரிடம் அப்பகுதியினர் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து பிடிபட்ட நபரை போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஆர்.ரவி கூறுகையில், ‘‘கடந்த இரண்டு மாதங்களாகவே அருள்புரம் பகுதியில் ரோட்டில் தனியாக நடந்து செல்வோர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை குறிவைத்து மர்ம நபர்கள் செல்போன் மற்றும் பணம், நகை ஆகியவற்றை பறித்து வருவதாகவும் 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களைத் திருடிச் சென்றுவிட்டதாகவும் இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் ஏற்க மறுத்து அலைக்கழிப்பதாகவும் உடனடியாக போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பணியை தீவிரப்படுத்தி இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...