இரவுநேர தள்ளுவண்டி உணவு-அனுமதி வேண்டி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் வியாபாரிகள் கோரிக்கை!

கோவை: இரவு நேரத் தள்ளுவண்டி உணவு வியாபாரத்திற்கு அனுமதி வேண்டி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: இரவு நேரத் தள்ளுவண்டி உணவு வியாபாரத்திற்கு அனுமதி வேண்டி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் சாலையோரங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தள்ளுவண்டியில் கடைகள்அமைத்து உணவு வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

இதில் தள்ளுவண்டிக் கடைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளார்.



இதனால் இரவு நேரங்களில் தள்ளுவண்டிகளில் உணவு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு அளித்தனர்.

தள்ளுவண்டியில் உணவு கடைகளைப்பொருத்தவரை பொதுமக்கள் அதிகமாகக் கூட வாய்ப்பில்லை. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மூன்று மணி நேரம் மட்டுமே வியாபாரம் நடைபெறுகிறது.

குறைந்த வருமானத்தைக் கொண்டு வாழ்வாதாரத்தைப் பெற்றுவரும் நிலையில், தள்ளுவண்டிக் கடைகளுக்கு அனுமதி இல்லை என்பது வேதனை அளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



மேலும், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தள்ளுவண்டிக் கடைகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...