கோவை: கிணத்துக்கடவு தொகுதி குறிச்சி பகுதியில் 97, 98 வது வார்டு பகுதியில் ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு தொகுதி குறிச்சி பகுதியில் 97, 98 வது வார்டு பகுதியில் ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட கோவை மாநகராட்சி 97, 98 வார்டு குறிச்சி பகுதியில் திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பு குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குறிச்சி வடைக்குப்பகுதி பொறுப்பாளர் காதர், 97 வது வட்ட பொறுப்பாளர் மௌலானா, குறிச்சி தெற்கு பகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.