கோவையில் அறிவிக்கப்படாத மின் நிறுத்தம்: குறு-சிறு தொழில்‌ முனைவோர்கள்‌ பெரும் அவதி!

கோவை: மாவட்டத்தில், 10 நிமிடம்‌ முதல்‌ 1 மணி நேரம்‌ வரை எவ்வித முன்‌அறிவிப்பும்‌ இல்லாமல்‌ மின் நிறுத்தம்‌ செய்யப்பட்டு வருவது குறித்து, மின் பகிர்மான‌ தலைமை பொறியாளரைச் சந்தித்து அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தைத் தவிரத்திட நடவடிக்கை கோரி தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தினர் மனு கொடுத்து உள்ளனர்.


கோவை: மாவட்டத்தில், 10 நிமிடம்‌ முதல்‌ 1 மணி நேரம்‌ வரை எவ்வித முன்‌அறிவிப்பும்‌ இல்லாமல்‌ மின் நிறுத்தம்‌ செய்யப்பட்டு வருவது குறித்து, மின் பகிர்மான‌ தலைமை பொறியாளரைச் சந்தித்து அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தைத் தவிரத்திட நடவடிக்கை கோரி தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தினர் மனு கொடுத்து உள்ளனர்.

கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு துணை மின்நிலையங்கள்‌ மூலமாகக் கடந்த 15 நாட்களாக ஒரு நாளைக்கு எவ்விதமான முன்‌ அறிவிப்பும்‌ இல்லாமல்‌ 5 முதல்‌ 10 முறை வரை, 10 நிமிடம்‌ முதல்‌ ஒரு மணி நேரம்‌ வரை மின் நிறுத்தம்‌ செய்யப்படுகிறது.

அந்த அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால்‌ குறு-சிறு தொழில்‌ முனைவோர்கள்‌ கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்‌. இந்த அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால்‌ ஓடிக்கொண்டு இருக்கும்‌ இயந்திரங்கள்‌ சட்டென்று நிற்பதால்‌ இயந்திரத்தில்‌ இருக்கும்‌ ஜாப்புகள்‌ கன்டம்‌ ஆவதுடன்‌, அதற்காக அமைக்கும்‌ டூல்கள்‌ உடைவதாலும்‌, கடுமையான பொருள்‌ நஷ்டத்தைச்‌ சந்திக்க வேண்டி உள்ளது.

இதனால்‌ ஜாப்‌ஆடர்கள்‌ செய்து கொடுப்பவர்களுக்குக் கிடைக்கும்‌ சொற்ப லாபங்களைக் கூட, ஏற்படும்‌ பொருள்‌ நஷ்டத்துக்குக் கொடுக்கும்‌ நிலைக்குத்‌ தள்ளப்பட்டு வருகிறார்கள்‌.

கடுமையான பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாக்கவும்‌, அறிவிக்கப்படாத மின் நிறுத்தம்‌ செய்யப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாக்கவும்‌ வேண்டுவதாகவும், மின்‌ பராமரிப்புக்காக அனைத்து துணை மின்நிலையங்களிலும்‌ மாதம்‌ ஒருமுறை மின் நிறுத்தம்‌ செய்யப்பட்டும்‌, அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால்‌ பெரும்‌ நஷ்டம்‌ சந்திக்கும்‌ தொழில்‌ முனைவோர்களைப் பாதுகாக்க ‌ நடவடிக்கை எடுத்து தடை இல்லாத மின்சாரம்‌ வழங்கிடவும், ‌தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின்‌ மாவட்ட தலைவர்‌ ஜேம்ஸ்‌, பொதுச்‌ செயலாளர் பிரதாப்சேகர், துணைத்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாவட்டச் செயலாளர்‌ பாரத்‌ ரவி மின்சார வாரியத்தின்‌ கோவை மாவட்ட மின் பகிர்மான தலைமை பொறியாளர்‌ டேவிட்‌ ஜெபசிங்கை சந்தித்து அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தைத் தவிரத்திட நடவடிக்கை கோரி மனு கொடுத்து உள்ளனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...