கிணத்துக்கடவில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த ஃபர்னிச்சர் கடை உரிமையாளர் உயிரிழப்பு..!

கோவை: பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஃபர்னிச்சர் கடை உரிமையாளர் விவேகானந்தசாமி, கிணத்துக்கடவில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார்.


கோவை: பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஃபர்னிச்சர் கடை உரிமையாளர் விவேகானந்தசாமி, கிணத்துக்கடவில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தசாமி(51), இவரது மனைவி ராஜேஸ்வரி பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். விவேகானந்தசாமி பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் ஃபர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், விவேகானந்தசாமி இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருக்கும் போது சாலையின் குறுக்கே வந்தவர் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். இதில், நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விவேகானந்தசாமிக்கு தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை விவேகனந்தசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்து சென்ற கிணத்துக்கடவு காவல் துறையினர் விசாரணை நடத்தி விவேகானந்தசாமியின் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...