கோவை: தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் NACP V (pay revision) ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்தி கோவையில் பணிபுரியும் இடங்களில் கவன ஈர்ப்பு கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் நடைபெற்றது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அலகு உள்ளிட்ட இடங்களில் ஆலோசகர், ஆய்வகநுட்புனர், செவிலியர், மருந்தாளுநர், கணினி மேலாளர், சமுதாய நல ஒருங்கிணைப்பாளர், மாவட்ட திட்ட மேலாளர், மேற்பார்வையாளர், ஆய்வக மேற்பார்வையாளர், கணக்காளர், ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் என பல்வேறு பணிநிலைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2,500 பேர் பணிபுரிந்து வருகிறோம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 70 பேர் பணிபுரிந்து வருகிறோம். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 25,000 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றத்தை (pay revision) அறிவிக்கும்.
ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக ஊதிய தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம்(NACO) ஊதிய மாற்றத்தை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் கடந்த 9-1-20 அன்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டும் ஊதிய மாற்றத்தை அறிவித்துள்ளார்கள். மற்ற ஊழியர்களுக்கு இதுநாள் வரை ஊதிய மாற்றத்தை அறிவிக்கவில்லை. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இத்தகையான பாகுபாடான செயல்பாடுகள் கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் முன்கள பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஊழியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. இதுகுறித்து தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் ஆகியோரை பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும், தீர்வும் ஏற்படவில்லை.
மேலும், தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு NACP V (pay revision) ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்கள். அதற்கும் மத்திய அரசு இதுவரை எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை.
எனவே, டெல்லியில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்கம் எடுத்துள்ள முடிவின்படி ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் NACP V ( pay revision) ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் உறுப்பினர்கள் பணிபுரியும் இடங்களில் கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ச் அணிந்து பணிபுரிந்து வருகிறார்கள்.