வால்பாறை அழியார் மலை சாலையில் எதிரே வரும் வாகனங்களை தெரியப்படுத்த டிஜிட்டல் அறிவிப்பு பலகை பொருத்தம்!

கோவை: வால்பாறை அழியார் மலை சாலையில் எதிரே வரும் வாகனங்களை தெரியப்படுத்த டிஜிட்டல் அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை அழியார் மலை சாலையில் எதிரே வரும் வாகனங்களை தெரியப்படுத்த டிஜிட்டல் அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்வதற்கு அழியார் பகுதியில் இருந்து 35 கிலோ மீட்டர் கொண்ட மலை பாதையில் சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த கொண்டை ஊசி வளைவு அழியார் பகுதியில் இருந்து 1வது கொண்டை ஊசி வளைவு துவங்கி 40வது கொண்டை ஊசி வளைவு ஐயற்பாடி எஸ்டேட் பகுதியில் முடிவடையும்.



இந்த கொண்டை ஊசி வளைவு பகுதியில் எதிர் எதிரே வரும் வாகனகள் வருவது தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.



இந்நிலையில், நெடுஞ்சாலை துறையினர் விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக 5வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சாலையில் மேலே மற்றும் கீழே என்று இரண்டு உணர்வு டிஜிட்டல் அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டு உள்ளது. மேலிருந்து வரும் வாகனங்களை கீழ் பகுதியில் இருந்து வரும் வாகனத்திற்கு முன் எச்சரிக்கை தெரியப்படுத்தும் வண்ணம் டிஜிட்டல் அறிவிப்பு பலகையை பொருத்தப்பட்டுள்ளது.



இது வாகனம் வருவது உணர்ந்து இயங்கக்கூடிய டிஜிட்டல் அறிவிப்பு பலகை ஆகும். இதில் மேலிருந்து வரும் வாகனம் கீழ் உள்ள அறிவிப்பு பலகையிலும் கீழ் இருந்து மேலே வரும் வாகனத்திற்கு மேல் பகுதியில் உள்ள அறிவிப்பு பலகையில் எதிரே வாகனம் வருகிறது. கவனமாக செல்லவும் என்ற வாக்கியத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவு செய்து வாகனம் வரும் பொழுது வாகனம் வருவது உணர்ந்து, டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் பதிவு செய்து வருகிறது. இது சோலார் சிஸ்டம் மூலமாக இயங்கப்படு வருகிறது.



மேலும், ஆழியாறு பகுதியில் இருந்து வால்பாறை ஆயர்பாடி எஸ்டேட் வரை 40 கொண்டை ஊசி வளைவு பகுதியில் குவி லென்ஸ் கண்ணாடி 45 இடங்களிலும் பொருத்தியும், கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் சாலையும் எதிரே வரும் வாகனங்கள் முற்றிலும் தெரியாமல் இருப்பதை அறிந்து கவனமாக செல்லவும் என்ற அறிகுறி லைட் விளக்கு ஐந்து இடங்களில் வைக்கப்பட்டு விபத்தை தடுக்கும் வண்ணம் நெடுஞ்சாலை துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...