மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது கேரள குதிரன் சுரங்கப்பாதை..! செல்ஃபி, வீடியோ எடுக்கும் வாகன ஒட்டிகள்!

கோவை: தென்னிந்தியாவின் முதல் நீளமான குதிரன் மலைத்தொடர்களை குடைந்து 1 கிலோ மீட்டர் வரையிலான பிரமாண்ட குகைப்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: தென்னிந்தியாவின் முதல் நீளமான குதிரன் மலைத்தொடர்களை குடைந்து 1 கிலோ மீட்டர் வரையிலான பிரமாண்ட குகைப்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பாலக்காடு - திருச்சூர் சாலையில் குதிரன் என்ற இடத்தில் மலைகளை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

மன்னுத்தி - வடக்கன்சேரி பகுதிகளை இணைக்கும் இப்பகுதி, மலைப் பாங்கான பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. கனரக சரக்கு வாகனங்கள் மெதுவான வேகத்தில் செல்வதால், போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகின்றன. சாலையின் இடையே குறுக்கிடும் மலையை கடக்க 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அரை மணி நேரத்திற்கும் மேலாக கால விரயம் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்கும் வகையில் மலையை குடைந்து சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, கேரளா மற்றும் தென்னிந்தியாவின் முதல் சாலை சுரங்கப் பாதையாக, மத்திய அரசின் நிதியில் கடந்த 2016 ம் ஆண்டு குதிரன் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டது.

பீச்சி - வாசஹனி வன விலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பணிகள் செய்யப்பட்டன. பாலக்காடு - திருச்சூர் சாலை மற்றும் திருச்சூர் - பாலக்காடு சாலை ஆகிய இரண்டு பாதைகளில் இரண்டு சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இரண்டிலும் சேர்த்து 6 வழிச் சாலையாக 1.6 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. இதனால் இரண்டு நிமிடங்களில் அந்த மலையை கடந்து செல்ல முடியும். 1300 கோடி ரூபாய் செலவில் இந்த சுரங்கப் பாதை பணிகள் செயல்படுத்தப்பட்டு வந்தது. எனினும் பணிகள் மெதுவாக நடந்து வந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.



இந்நிலையில், பாலக்காடு - திருச்சூர் சாலையில் உள்ள சுரங்கப் பாதை பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு வழி பாதை திறக்கப்பட்டது.



இதையடுத்து, வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 964 மீட்டர் தூரம் மலைக்குள் சுரங்கப் பாதை செல்கிறது. 14 மீட்டர் அகலமும், 10 மீட்டர் உயரமும் கொண்டதாக சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



1200 எல்.இ.டி. விளக்குகள் மற்றும் 100 மீட்டருக்கு ஒன்று என்ற வீதத்தில் சிசிடிவி கேமராக்கள், இரண்டு எமர்ஜென்சி போன்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.



அதேபோல, குதிரன் சுரங்கப் பாதையை முழுமையாக கண்காணிப்பதற்கு பிரத்யேகமான கண்ட்ரோல் ரூம் இயங்கி வருகிறது. அங்கு சுரங்கபாதை வழியாக நுழையும் அனைத்து வாகனங்களும் மக்களும் கண்காணிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் உடனடியாக அதற்கான பிரத்யேக வசதிகள் அனைத்தும் உள்ளது என்று தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, குதிரன் சுரங்கப் பாதை திறக்கப்படும் என டிவிட்டரில் பதிவிட்டார். இதன் திறப்பு விழா எளிமையாக நடத்தப்பட்டது. அன்று மாலை பாலக்காடு - திருச்சூர் சாலையில் உள்ள சுரங்கப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.



மேலும், திருச்சூர் - பாலக்காடு சாலையில் சுரங்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு அப்பாதையும் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...