வால்பாறை நகராட்சி சுகாதார துறை சார்பில் வீடு வீடாக 'கபசுர குடிநீர் பொடி' விநியோகம்!

வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறை மூலம் வீடு வீடாக கபசுர குடிநீர் பொடி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


கோவை: வால்பாறை நகராட்சி சுகாதாரத் துறை மூலம் வீடு வீடாக கபசுர குடிநீர் பொடி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வால்பாறை நகராட்சி பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் நகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இதன் மற்றொரு நடவடிக்கையாக வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 21-வார்டு பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் பொடி பாக்கெட்டுகளை 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.



மேலும், வீடுகளில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்றவை இருக்கிறதா என்பதை விசாரித்து குறிப்பெடுத்து வருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...