வால்பாறை தேயிலை தோட்டத்தில் சிறுத்தைகள் குட்டிகளுடன் நடமாட்டம்! பொது மக்கள் அச்சம்!

கோவை: வால்பாறை நகரில் மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறை நகரில் மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. இங்குள்ள வால்பாறை வனச்சரகம் மற்றும் மானாம் பள்ளி வனச்சரகத்தில் வன விலங்குகளான கரடி சிறுத்தைப் புலி யானை போன்றவை ஏராளமாக உள்ளன.

இந்த வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறி உணவு தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரத் துவங்கியுள்ளன.

வால்பாறை நகரில் உள்ள வாழைத்தோட்டம் எம்ஜிஆர் நகர் அண்ணா நகர் நடுமலை சாலை கோஆபரேட்டிவ் காலனி மற்றும் காமராஜர் நகர் கக்கன் காலனி பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடி வருகின்றன.

தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கரடிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், வால்பாறை நகரில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இன்னிலையில், வால்பாறை நகரில் உள்ள காமராஜ் நகரில் குடியிருப்பு பகுதி அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைகள் குட்டிகளுடன் நடமாட்டத்தைக் கண்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வனத்துறையினர் பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...