கோவையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!

கோவை: சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்துப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் அரசு வழங்க உத்தரவிடப்பட்டது.


கோவை: சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்துப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் அரசு வழங்க உத்தரவிடப்பட்டது.

கோவை போக்சோ மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 லட்சம் அரசு நிதி வழங்க வேண்டுமெனவும், நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலிபருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் காணாமல் போனதாக அவரது பெற்றோர் சார்பில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.

இரு வாரத்திற்குப் பிறகு சிறுமியை காவல்துறையினர் மீட்டு, விசாரணை செய்ததில், கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த இடையளர்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (20) என்பவரைக் காதலித்து, அவருடன் சென்றதாகவும், அப்போது திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்துகொண்டதாகச் சிறுமி கூறியுள்ளார்.

சிறுமி வாக்குமூலத்தின் அடிப்படையில், கார்த்திக்கைக் கைது செய்த காவல்துறையினர், ஆள் கடத்தல், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், போக்ஸோ ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கார்த்திக்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி பரிந்துரை செய்தார்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...