செம்மேடு அருகே தாலி கட்டிய பின் வயதான தம்பதிகள் விஷம் குடித்து பலி..!

கோவை: கோவை அருகே வயதான தம்பதிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அருகே வயதான தம்பதிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் செம்மேடு அருகே வெள்ளியங்கிரி பூண்டி கோவிலுக்குச் செல்லும் வழியில் 70 வயது மதிக்கத்தக்க ஆண், மற்றும் 65 வயது மதிக்கத்தக்கப் பெண் என தம்பதிகள் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து ஆலந்துரை காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்குச் சென்ற காவல்துறை சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், "இந்த தம்பதிகள் உள்ளூர் வாசிகள் இல்லை. ஆடிப்பெருக்கு என்பதால் கோவிலுக்கு வந்ததாகத் தெரிகிறது. இதுவரை அடையாளமும், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணமும் தெரியவில்லை. ஆனால், புதிதாகத் தாலி மாற்றியுள்ளதாகவும் தெரிகிறது. விசாரித்து வருகிறோம்." என்றனர்.

வயதான தம்பதிகள் விஷம் அருந்தி சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...