கோவை: சொகுசு வாழ்க்கைக்காக, கோவையில் பெண்களிடம் நகை பறித்த இரண்டு வாலிபர்கள், சி.சி.டி.வி. கேமரா மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 27 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர்.

கோவையில் நடந்து செல்லக்கூடிய பெண்கள், வயது முதிர்ந்த பெண்கள் என பல்வேறு நபர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்து. முகவரி கேட்பது போலவும், உங்களுடைய பொருள் கீழே விழுந்து விட்டது என கூறியும், இருபது ரூபாய் பத்து ரூபாய் நோட்டுகளை கீழே போட்டுவிட்டு உங்கள் பணம் கீழே விழுந்துவிட்டது என்றும் கூறி அவர்கள் கவனத்தை திசைதிருப்பியும், முகவரி கேட்பது போலவும், நடித்து தொடர்ந்து கோவை பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு வாலிபர்களை சிசிடிவி கேமரா கண்காணிப்பு மூலமாக போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறும் பொழுது, வாழ்க்கை வாழ்வதற்கே.. நாங்கள் இருக்கும் வரை சொகுசாக வாழ வேண்டும் அதற்காகத்தான் திருடுகிறோம் என போலீஸாரிடம் கூறி உள்ளனர். இளைய சமுதாயம் எதை நோக்கி செல்கிறது என்பது கேள்விக்குறியாகி வருகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
‘‘கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் பைக்கில் சென்று நகை பறிப்பு அதிகரித்து வந்தது துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுகுமார் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை போலீஸார் நகை பறிப்பு குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதில் கோவை வடவள்ளி ஜி.கே.எஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்த விஜய்(24), ஆர்.எஸ்.புரம் மீனாட்சி நகரை சேர்ந்த மணிகண்டன்(19) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் குனியமுத்தூர், ரத்தினபுரி, சாய்பாபா காலனி, காட்டூர், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் நகை பறித்து தப்பிப்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 27 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் வாகனங்களில் சென்று நகை பறித்து வந்துள்ளதாகத் தெரிகிறது. துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நகை பறித்த வழக்கில் கைதான இரண்டு பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் சில மாதங்கள் இருந்து ஜாமினில் வெளியே வந்த இவர்கள் மீண்டும் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். புறநகரில் போலீஸார் தேடுவதை அறிந்து நகர்ப் பகுதியில் இவர்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கினர். போலீஸார் பல்வேறு பகுதிகளில் இவர்கள் நகை பறித்து தப்பிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவை வைத்து அடையாளம் கண்டு தேடிப் பிடித்து கைது செய்தனர்.