கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா பரவல்‌ தடுப்பு விழிப்புணர்வு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது..!

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா பரவல்‌ தடுப்பு விழிப்புணர்வு பாதுகாப்பு நடைமுறைகளை வணிகா்கள்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்கள்‌ முழுமையாகக் கடைப்பிடிப்பது குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ தலைமையில்‌ நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா பரவல்‌ தடுப்பு விழிப்புணர்வு பாதுகாப்பு நடைமுறைகளை வணிகா்கள்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்கள்‌ முழுமையாகக் கடைப்பிடிப்பது குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா பரவல்‌ தடுப்பு விழிப்புணர்வு பாதுகாப்பு நடைமுறைகளை வணிகர்கள்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்கள்‌ முழுமையாகக் கடைப்பிடிப்பது குறித்த ஆலோசனைக்‌ கூட்டம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி கலையரங்கத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தலைமையில்‌ இன்று 03.08.2021 நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்ததாவது,



‘‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்‌ ஆணைக்கிணங்க கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு விழிப்புணவு வார நிகழ்வினையொட்டி 3-ம்‌ நாளாக நடைபெறுகிறது. வணிகர்கள்‌ தங்கள்‌ கடைகளுக்கு வரும்‌ வாடிக்கையாளர்களை கொரோனா பாதிக்காமல்‌ இருக்க அரசின்‌ பாதுகாப்பு வழிமுறைகளான முகக் கவசம்‌ அணிதல்‌, சமூக இடைவெளி மற்றும்‌ கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. தங்களது கடைகளுக்கு வரும்‌ வாடிக்கையாளர்கள்‌ கட்டாயம்‌ முகக் கவசம்‌ அணிந்திருத்தல்‌ வேண்டும்‌. நீங்களும்‌ அணிந்திருத்தல்‌ வேண்டும்‌. அனைத்து வணிகர்களும்‌ கடைகளுக்கு முன்‌ கிருமிநாசினி வைத்து வாடிக்கையாளா்கள்‌ பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்‌. அரசின்‌ வழிகாட்டுதலின்படி கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்‌ விதிக்கப்படும்‌. அரசு மேற்கொள்ளும்‌ நடவடிக்கைகளுக்கு அனைத்து வணிகா்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்‌'' என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧ரா இ.ஆ,.ப., தெரிவித்தார்கள்‌.



இதனைத்‌ தொடர்ந்து, கொரோனா தடுப்பு உறுதிமொழியினை மாநகராட்சி ஆணையாளர்‌ தலைமையில்‌ அனைத்து வணிகர்கள்‌ எடுத்துக்‌ கொண்டார்கள்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தின்‌ சுவற்றில்‌ பண்டைய தமிழர்களின்‌ வாழ்வியலை எடுத்துக்‌ கூறும்‌ வகையில்‌ சிறப்பு ஓவியங்கள்‌ வரையப்படுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧ரா இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்தநிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ கு.விமல்ராஜ்‌, BST நல அலுவலர்‌ மரு.ரஜா, அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள்‌, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ மற்றும்‌ வாத்தகர்கள்‌ சங்கத்தினர்‌, உணவகங்கள்‌ உரிமையாளா்கள்‌, தங்கும்‌ விடுதிகள்‌, காய்கறி மாரக்கெட்கள்‌, துணிக்கடைகள்‌, நகைக்கடைகள்‌ மற்றும்‌ சாலையோர வியாபாரிகள்‌ சங்கத்தினர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...