கோவையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் கடத்திய வழக்கில் நைஜீரிய வாலிபர் கைது... மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..!

கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் சிறப்பு போலீஸாருக்கு போதைப் பொருள் கடத்தி வருவதாக தகவல் வந்தது.



கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் சிறப்பு போலீஸாருக்கு போதைப் பொருள் கடத்தி வருவதாக தகவல் வந்தது. 

அதைத் தொடர்ந்து, கோவை ரயில் நிலையத்தில் வைத்து நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க இ.சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்திய நைஜீரிய வாலிபரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, மத்திய போதைப் பொருள் தடுப்புப்பிரிவுக்கு கோவை இ.சி. (இன்றியமையாத பண்டகங்கள்) சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் சென்னை மண்டல அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், டெல்லியில் இருந்து கேரளா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை ரயில் நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் இருந்த நைஜீரிய இளைஞரின் உடைமைகளை மதுரை மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை செய்தனர்.

அப்போது, ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2.23 கிலோ ‘ஆம்பிடமைன்' என்ற போதைப் பொருளை அவர் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நைஜீரியாவைச் சேர்ந்த எட்வின் கிங்ஸ்லி(26) என்பவரை என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தநிலையில், எட்வின் கிங்ஸ்லியை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி மதுரை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இன்றியமையா பண்டகங்கள் சட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) கோவிந்தராஜன், நைஜீரிய இளைஞரை மூன்று நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...