கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இருந்து தினமும் 450 முதல் 600 டன் குப்பைகள் வரை பயோ மைனிங் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது, என மாநகராட்சி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைக் கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக்டன் அளவிற்கு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன.
இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக காணப்பட்டது. இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு, தனியார் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள மொத்த குப்பைகள் அளவு என்ன? என்ன மாதிரியான குப்பைகள் அதிகமாக தேங்கியுள்ளன? என்பது குறித்து அளவீடு செய்ய அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குரியன் ஜோசப் தலைமையிலான குழுவினர் கடந்த ஆண்டு வந்தனர்.
அவர்கள் டிரோன் கேமராவில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுன் தேங்கியுள்ள குப்பைகளை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆய்வு தொடர்பாக அறிக்கை தயார் செய்து பயோ மைனிங் மூலம் குப்பைகளை அழிக்கும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தேங்கியுள்ள குப்பைகளின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இருந்து தினமும் 450 முதல் 600 டன் வரை பயோ மைனிங் மூலம் குப்பைகள் அழிக்கப்பட்டு வருகிறது. தேங்கி இருக்கும் குப்பைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குப்பைகளின் அளவு குறைவதால் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்படும் அபாயத்திற்கான வாய்ப்பு குறைந்துள்ளது,’’ என்றார்.