கோவை: ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்த உரிமையாளர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோவை: ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்த உரிமையாளர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை மேட்டூரில் ஈமுநிதி நிறுவனம் நடத்தி வந்தவர் செந்தில்நாதன். ஈமு வளர்ப்பு திட்டத்தில் 129 பேர் இடம் 4.3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2012-ல் கைது செய்யப்பட்டார்.
பிறகு ஜாமீனில் வெளிவந்தவர் கடந்த 5 வருடங்களாகத் தலைமறைவாக இருந்து வருகிறார். தொடர்ந்து இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜாமினில் வெளிவந்த செந்தில்நாதன் அதைத் தொடர்ந்து தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமலிருந்து வந்தார். பிறகு தலைமறைவானார்.
அவருக்கு 2016 ஏப்ரலில் பிடிவாரண்டு பிறப்பித்தது. 5 ஆண்டு காலமாக அவர் போலீசில் சிக்க வில்லை. நீண்டகாலம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் செந்தில்நாதன் அறிவிக்கப்பட்ட தேடப்படும் குற்றவாளியாக டான்பிட் கோர்ட்டு உத்தரவிட்டது.
இவரைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்குத் தகவல் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.