கோவை: தண்ணி லாரி ஏற்றி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கோவையில் தண்ணீர் லாரி மோதி நான்கு பேர் பலியான வழக்கில், ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை நகரிலுள்ள கணபதி, ராமகிருஷ்ணா புரம் மாரப்ப கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 44). கோகுல் வாட்டர் சப்ளை நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றினார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி கணபதி, சங்கனுார் மெயின் ரோட்டில், தண்ணீர் லாரியை ஓட்டி வந்தார். அதிவேகமாக லாரியை ஓட்டியதால், கண்ணப்பன் நகர் பஸ் ஸ்டாபில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது லாரி மோதி, அருகிலிருந்த ஸ்டூடியோவிற்குள் புகுந்தது.
இதில், விஜயா (வயது 37), ஒன்றரை வயது குழந்தை காயத்ரி, பொன்னுசாமி (வயது 38), சுடலை முத்து ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக மத்திய பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து, டிரைவர் ஜெயபால், லாரி உரிமையாளர் சசிகுமார் ஆகியோர் மீது, கோவை குண்டுவெடிப்பு வழக்கு தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
11 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, குற்றம் சாட்டப்பட்ட ஜெயபாலுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். லாரி உரிமையாளர் சசிகுமார் விடுதலை செய்யப்பட்டார்.