வால்பாறை அருகே ஆறுமாதக் கன்று குட்டியை சிறுத்தை கொன்றது..!

கோவை: வால்பாறை அருகே பட்டப்பகலில் ஆறுமாத கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடிக் கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே பட்டப்பகலில் ஆறுமாத கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடிக் கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது வால்பாறை பகுதியில் யானை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொது மக்களை தொந்தரவு செய்த சிறுத்தை, வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய் போன்றவற்றை வேட்டையாடிக் கொன்று வருகிறது.

வால்பாறை அருகே குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் சுப்பிரமணி என்பவர் தன் வீட்டில் இரண்டு மாடு, ஒரு கன்றுக்குட்டி வளர்த்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் இரண்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு ஆறுமாத கன்றுக்குட்டியை தனது வீட்டிற்கு முன்பு கட்டிப் போட்டுள்ளார். காபி தோட்டத்திலிருந்து வந்த சிறுத்தை ஒன்று கன்று குட்டியைக் கொன்று புதருக்குள் இழுத்துச் சென்றது.



பொதுமக்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டதால் கன்றுக்குட்டியை விட்டுவிட்டு ஓடிச் சென்றது.



பின்பு, தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கன்றுக் குட்டியைப் பார்வையிட்டனர்.



இறந்த கன்றுக்குட்டியை உண்பதற்காக சிறுத்தை அப்பகுதியில் சுற்றுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு அருகில் உள்ள முட்புதர்களை அகற்றவும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கவும் பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...