தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுவது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு புதிதல்ல - கமல்ஹாசன், மநீம தலைவர்

கோவை: தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுவது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு புதிதல்ல என்று கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.



கோவை: தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுவது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு புதிதல்ல என்று கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நேர்மையாக எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி எனவும் அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வணக்கம் தெரிவிக்க கோவை வந்துள்ளேன் என்றார்.



கோவையில் மக்கள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது மக்களை எண்ணித்தான் எனவும், மக்களின் நலன் பார்த்தே ஆளுங்கட்சி செயல்பட்டு வரும் நிலையில், அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

கொங்குநாடு அரசியல் கோஷம் மட்டுமே, மக்கள் தேவை இல்லை என கூறிய அவர், கோவை மக்களுக்கு திட்டங்களில் பிரிவினை பார்க்கப்படுவதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறினார்.



மேலும், ஈஸ்ட் இண்டியன் கம்பனி போல, வடக்கில் வடக்கிந்திய கம்பனி தயாராகி வருவதாகவும், மேகதாது விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

கொரோனா நடவடிக்கையில் ஆளுங்கட்சி முடிந்ததை செய்கிறது. இன்னும் அதிகமாக செய்யலாம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் தோல்வியை சினிமாவிலும் கற்றிருக்கிறேன் என்றும் கோவை மக்கள் எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளார்கள் என்றார்.



மேலும், இழந்த அரசியல் மாம்பை மீட்டெடுப்பது எங்கள் பணி என்றவர், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுவது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு புதிதல்ல என்று கூறினார்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...