இந்தியாவில் முதல் முறையாக, 'ஏர் இந்தியா' சார்பில் கோவை விமான நிலையத்தில், 'பாண்டட் ட்ரக்' (Bonded Truck Service) சேவை இன்று துவக்கம்.
கோவை: இந்தியாவில் முதல் முறையாக 'ஏர் இந்தியா' சார்பில், கோவை சர்வதேச விமான நிலையத்தில், 'பாண்டட் ட்ரக்' (Bonded Truck Service) சேவை இன்று மாலை துவங்கவுள்ளது.
வழக்கமாக, கோவையிலிருந்து ஏற்றுமதிசெய்யப்பட வேண்டிய பொருட்கள், பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு, சாலை வழியாக கொண்டு செல்லப்படும். பின்னர், அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும்.
குறிப்பாக, சர்வதேச விமான போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத கோவை போன்ற நகரங்களில் இதுபோன்ற 'Bonded Truck Service' பல்வேறு உலக நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.