கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: வால்பாறையில் கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் இருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

கோவை: வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் இருந்தால் மட்டும் காவல்துறையினர் சார்பில் அனுமதிக்கப்படுகின்றனர்.


கோவை: வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் இருந்தால் மட்டும் காவல்துறையினர் சார்பில் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வால்பாறை, சோலையாறு அணை, கூழாங்கல் ஆறு போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் காணப்பட்டதால். கொரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், இன்று காலை 6 மணி முதல் மளிகை, தேநீர், காய்கறி கடைகள் 5 மணி வரை திறக்க அனுமதி அரசு டாஸ்மாக் காலை 10 முதல் 5 மணி வரையும் திறக்க அனுமதி மற்ற கடைகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று ஆடிப்பெருக்கு தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த வால்பாறை வரும் வழியில் ஆழியார் பகுதியில் வனத்துறை சோதனைச் சாவடியில் வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து வால்பாறைக்கு வரும் வாகனங்களை பரிசோதனை செய்தனர்.



அப்போது, கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழ் உள்ளதா என்று ஆய்வு செய்து, கொரோனா தடுப்பு ஊசி இரண்டு தவணை போடப்பட்டு உள்ளதா என்று பரிசோதனை செய்து வால்பாறைக்கு அனுமதிக்கின்றனர். இந்த சான்றிதழ் இல்லை என்றால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து உள்ளது.

அதேபோல, வால்பாறைக்கு வரும் வழிகள் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு காட்சி முனை பகுதி மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி அருவி அனைத்தும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. வால்பாறையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் வெறிச்சோடி காணப்படுகிறது.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...