உலக தாய்ப்பால் வாரம்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி துவக்கம்!

திருப்பூர்: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டுள்ளது.

உலக தாய்ப்பால் வாரவிழா ஆகஸ்ட் முதல் வாரம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், தாய்ப்பால் வங்கி துவக்கவிழா இன்று துவக்கப்பட்டது.

இந்த விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் கலந்து கொண்டு தாய்ப்பால் வங்கியை துவக்கி வைத்தார். மேலும், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளின் தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.



தாய்ப்பால் வங்கி குறித்து, அரசு மருத்துவர்கள் கூறுகையில், தாய்ப்பால் வங்கியானது, பத்து லட்சம் மதிப்பிலான புதிய உபகரணங்களுடன் துவக்கப்பட்டு உள்ளதாகவும், தானமாக வரும் தாய்ப்பாலை சுத்திகரிப்பு செய்த பின்னரே எடை மற்றும் நோய் குறைபாடுடைய குழந்தைகளுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், தாய்ப்பாலை தானமாக தர விரும்பும் தாய்மார்கள் அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு உபரி தாய்ப்பாலை தானமாக தரலாம் என தெரிவித்தனர். மேலும், அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் அச்சிந்தியா தாய்ப்பால் சேகரிப்பு மையம் அமைப்புகள் இணைந்து மாவட்டத்தின் பிற பகுதிகளில் தாய்மார்கள் தானமாக தரும் தாய்ப்பாலினை பெற்று வந்து மருத்துவமனையில் வழங்கும் சேவையினை செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...