கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள்..!

கோவை: கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்கதையாக உள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்கதையாக உள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவையில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்ட பிறகு கேரள மாநிலம் மற்றும் கர்நாடகா மாநில லாட்டரி சீட்டுகள் மறைமுகமாக விற்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஒரு நம்பர் லாட்டரி சீட்டு என அதை செயல்படுத்தி வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக சூதாட்டம் கோவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு சிலர் தங்களுடைய பணங்களை ஆன்லைன் மூலம் பறிகொடுத்து நிராயுதபாணியாய் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு நிலைகுலைந்து நிற்கின்றனர். இந்தநிலையில், தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.

கோவை செல்வபுரம் செட்டி வீதி பகுதியைச் சேர்ந்த கருப்பு ராஜ் என்பவரின் மகன் கார்த்திக்(36). இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். கார்த்திக் மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை வாங்கி ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் அடிக்கடி ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இப்படி ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் சில லட்ச ரூபாயை கார்த்திக் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் கார்த்திக் இருந்து வந்துள்ளார். இதை அடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி திவ்யா செல்வபுரம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...