கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், கோவையில் 20 லட்சம் பேர்களைக் கடந்து கொரோனா பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவையில் கொரோனா பரிசோதனை விரிவுபடுத்தப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பாகவும், சுகாதாரத்துறை சார்பாகவும், மாநகராட்சி நிர்வாகம் சார்பாகவும் வீடு வீடாக சென்று வாகனங்களில் தெருத்தெருவாக மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மூன்றாம் அலை தொடங்கும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ள நிலையில் இதுவரை கோவையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் இதுவரை கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊரகப் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு மருத்துவ முகாம்கள், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு எடுக்கப்படும் சளி மாதிரிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகிய இரண்டு அரசு ஆய்வகங்கள், 19 தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, தினசரி 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘‘கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களை விரைந்து கண்டறிதல் முக்கியம். அதன் அடிப்படையில், கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் அலையின்போது அதிகபட்சமாக தினசரி 7 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கொரோனா 2ஆவது அலை தீவிரமாக இருந்ததால் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு நாள்தோறும் 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் பரிசோதனைகள் வரை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இதுவரை 20 லட்சத்து 19 ஆயிரத்து 770 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட், தொழிற்சாலைகள், அரசு, தனியார் நிறுவனங்கள் போன்ற அதிக அளவில் கூட்டமாக மக்கள் வேலை செய்யும் இடங்களில் சுழற்சி முறையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது'' என்றனா்.