உரிய ஆவணங்கள் இன்றி மண் எடுப்பில் ஈடுபட்ட மூன்று வாகனங்கள் சிறைபிடிப்பு..!

கோவை: கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி கனிம வளங்கள் அதிகமாக சுரண்டப்படுவதாகவும் இதனால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து செங்கல்சூளைகளும் மூடப்பட்டன. இப்பகுதியில் யாரும் மண் எடுக்ககக் கூடாது என்றும் உத்தரவிடப்படுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி கனிம வளங்கள் அதிகமாக சுரண்டப்படுவதாகவும் இதனால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து செங்கல்சூளைகளும் மூடப்பட்டன. இப்பகுதியில் யாரும் மண் எடுக்ககக் கூடாது என்றும் உத்தரவிடப்படுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் சாலை காளையனூர் பழனி குட்டை பகுதியில் இரண்டு ஜேசிபி மற்றும் 1 லாரி மண் எடுத்துக் கொண்டிருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் வடக்கு மண்டல துணை வட்டாட்சியர் சரவணகுமாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு மண்டல துணை வட்டாட்சியர், கோவை வடக்கு வட்டாட்சியர், கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர், வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலர் குழு சம்பவ இடத்தில் மண்ணை எடுத்துக் கொண்டிருந்த வாகன ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.



முதலில் அவர்கள் விவசாயத்திற்காக நிலத்தை சரி செய்வதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், மூன்று வாகனங்களையும் சிறைப் பிடித்த அதிகாரிகள் தடாகம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் மண் எடுப்பில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...