கோவை: குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கிணத்துக்கடவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் குட்கா, புகையிலை போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கிணத்துக்கடவு காவல் துறை உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி கிணத்துக்கடவு ரயில் நிலையம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடையில் இருந்த கிணத்துக்கடவு ரெயில்வே தோட்டம் பகுதியைச் சேர்ந்த தீபக்(46) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.