கேரளாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரிப்பு... கிணத்துக்கடவு தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு..!

கோவை: கேரளாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கிணத்துக்கடவு தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. வாகனப் பரிசோதனியின்போது, இ-பாஸ் இல்லாமல் வந்தவர்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர்.


கோவை: கேரளாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கிணத்துக்கடவு தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. வாகனப் பரிசோதனியின்போது, இ-பாஸ் இல்லாமல் வந்தவர்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர்.

கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து காணப்படுவதால், கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால், கோவை மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியான வீரப்பகவுண்டனூர் காவல் துறை சோதனைச் சாவடியில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்தநிலையில், இன்று கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா கண்காணிப்பு பணியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கேரள பகுதியிலிருந்து தமிழகத்திற்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால், வாகனங்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.



அதன் அடிப்படையில் கேரளா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த வாகனங்களை காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, வாகனங்களில் வந்தவர்களுக்கு உடல் வெப்பம் மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்த பின்னரே அனுமதித்தனர். அதேந்நேரம், இ-பாஸ் இல்லாமல் வாகனங்களில் வந்தவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...